சுடச்சுட

  

  திருப்பூரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். 
  திருப்பூர், காங்கயம் சாலையில் வசித்து வருபவர் வேலாயுதம் (52), சமையல் தொழிலளியாள இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி சில நாள்களுக்கு முன்னர் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். 
  இதையடுத்து கடந்த 10 நாள்களாக அந்தச் சிறுமிக்கு வேலாயுதம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் இரு நாள்களுக்கு முன்னர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் வேலையுதத்தை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai