சுடச்சுட

  

  தடகளப் போட்டி: ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். பள்ளி மாணவி சிறப்பிடம்

  By DIN  |   Published on : 15th August 2019 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருப்பூரில் நடைபெற்ற தடகளப் போட்டியில், காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
  திருப்பூர் மாவட்ட தடகள விளையாட்டுக் கழகம் சார்பில் மாவட்ட இளையோர் தடகள போட்டி திருப்பூரில் உள்ள டீ பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். பள்ளி11-ஆம் வகுப்பு மாணவி ஆர்.சினேகவர்ஷினி 17 வயதுக்குள்பட்டோருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.
  இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார்.
  போட்டியில் வெற்றிபெற்ற மாணவி சினேகவர்ஷினி, உடற்கல்வி ஆசிரியர்கள் கே.மணிவேல், டி.சதீஷ் ஆகியோருக்கு பள்ளித் தாளாளர் கே.வைத்தீஸ்வரன், பள்ளி முதல்வர் மு.ப.பழனிவேலு, ஆசிரியர்கள் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai