சுடச்சுட

  

  திமுக சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான நூல்கள் அரசுப் பள்ளிக்கு வழங்கல்

  By DIN  |   Published on : 15th August 2019 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான நூல்கள் அரசுப் பள்ளி நூலகத்துக்கு வழங்கப்பட்டன.
   திருப்பூர், அங்கேரிபாளையம் வி.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்காக நூலகம் அண்மையில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் நூலகத்துக்கு புத்தகங்கள் கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.   இக்கோரிக்கையை ஏற்று ரூ.1 லட்சம் மதிப்பிலான 500 நூல்களை அவர் வழங்கினார். இந்நூல்களை பள்ளி நூலகத்துக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
    திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி வளர்ச்சிக்குழு நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில் புத்தகங்களை நூலகத்துக்கு வழங்கினார்.  இதில் மாநகர செயலாளர் டி.கே.டி.நாகராஜ், மாவட்ட அவைத் தலைவர் திருமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, தினேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai