சுடச்சுட

  

  பல்லடம் பகுதியில் தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. 
  பல்லடம் அருகேயுள்ள வாவிபாளையம், காட்டூர், பொங்கலூர், வடமலைபாளையம், ஜல்லிபட்டி, கேத்தனூர்,சித்தம்பலம், கள்ளிப்பாளையம், எலவந்தி உள்ளிட்ட பகுதியில் விளையும் காய்கறிகள் பல்லடம், திருப்பூரில் உள்ள தினசரி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. 
  கடந்த வாரம் தக்காளி வரத்து அதிகரிப்பால் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 10க்கு விற்பனையானது. இதனால் தோட்டங்களில் விளைந்த தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விவசாயிகள் விட்டுவிட்டனர். மேலும் தொடர் மழையால் செடியில் தக்காளி அழுகத் துவங்கியதால் விவசாயிகள் தக்காளியைப் பறிக்கவில்லை. 
  அதனால் பல்லடம், திருப்பூர் சந்தையில் தக்காளி வரத்து குறைந்தது. அதனால் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ. 20ஆக விலை உயர்ந்துள்ளது.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai