சுடச்சுட

  

  வெள்ளக்கோவிலில்போலீஸார் நடத்திய திடீர் வாகன சோதனையில் 25 பேருக்கு  புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
   வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸார் மூலனூர் சாலையிலுள்ள ஒரு எடை நிலையம் அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது என 25 பேர் பிடிபட்டனர்.
  இதில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ.100, குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai