சுடச்சுட

  

  வெள்ளக்கோவிலில் கூடுதல் துணை மின் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

  By DIN  |   Published on : 15th August 2019 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வெள்ளக்கோவிலில் ரூ. 1 கோடி செலவில் கூடுதல் துணை மின் நிலையம் அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.
   முத்தூர் சாலையில் உள்ள துணை மின் நிலையம் மூலம் வெள்ளக்கோவில் பகுதிக்கு மின்சார விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கு ராசாத்தாவலசு மின் நிலையத்திலிருந்து மின்சாரம் எடுத்து வரப்படுகிறது. தற்போது வெள்ளக்கோவில் பகுதியில் புதிதாக நூல் மில்கள் அதிக அளவில் துவங்கப்பட்டு வருவதால் அவற்றுக்கு மின் இணைப்புகள் கொடுப்பதற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படுகிறது.
   ஜூலை மாதம் வரை 300 க்கும் மேற்பட்ட புதிய இணைப்புகள் காத்திருப்பில் உள்ளன. வெள்ளக்கோவில் துணை மின் நிலையத்தைத் தரம் உயர்த்துமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ராசாத்தாவலசிலிருந்து வெள்ளக்கோவில் வரை 5.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு 33,000 வோல்டேஜ் திறன் கொண்ட புதிய மின் பாதை அமைக்கப்படுகிறது.
  இதற்காக 42 அடி உயரம் கொண்ட 40 இரும்புக் கம்பங்கள், 30 அடி உயரமுள்ள 100 சிமென்ட் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. வெள்ளக்கோவில் துணை மின் நிலையத்தில் 8 எம்விஏ, 33/11 கேவி திறனுடைய கூடுதல் துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது.
  இதற்கான பணிகள் 75 சதவீதம் முடிவடைந்ததுள்ள நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படுமென வெள்ளக்கோவில் மின்வாரிய அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai