சுடச்சுட

  

  வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை விலை கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ. 6 உயர்ந்திருந்தது.
  இங்கு வாரந்தோறும் புதன்கிழமை கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு பூண்டி, திருச்சி, லாலாப்பேட்டை, உடையாம்பட்டி, பழனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50 விவசாயிகள் தங்களுடைய 310 மூட்டைகள் கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இவற்றின் எடை 15,513 கிலோ. 
  விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் நடந்த ஏலத்தில், ஒரு கிலோ ரூ. 53.60 முதல் ரூ. 100.55 வரை விற்பனையானது. 
  சராசரி விலை கிலோ ரூ. 85.55. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 12 லட்சத்து 41 ஆயிரத்து 386 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai