அவிநாசி அருகே மக்கள் எதிர்ப்பால் சாலை அமைக்கும் பணி ஒத்திவைப்பு

அவிநாசி அருகே செம்மாண்டம்பாளையத்தில் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

அவிநாசி அருகே செம்மாண்டம்பாளையத்தில் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட செம்மாண்டம்பாளையம், கருக்கம்பாளையம், கருமாபாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மடத்துப்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் இருந்து செம்மாண்டம்பாளையத்துக்குச் செல்லும் சாலையின் வளைவுப்பகுதியை நேராக மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இந்தச் சாலையை சீரமைப்பதற்காக மாநில நெடுஞ்சாலைத் துறை ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 73 லட்சத்தை கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்தது. பின் நில அளவீடு முடிவடைந்து பணிக்கான ஒப்பந்தப்புள்ளியும் விடப்பட்டது. 
இதையடுத்து பணி துவங்க இருந்த நிலையில் ஒரு தரப்பினர், தற்போது திட்டமிட்டுள்ளபடி சாலை அமைத்தால் மழைநீர் அங்குள்ள மயானத்துக்குள் புகுந்து விடும் என்று கூறி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒப்பந்ததாரர் பொக்லைன் வாகனத்துடன் வந்து புதன்கிழமை பணியைத் துவக்கியுள்ளார். அப்போது மீண்டும் ஒரு தரப்பு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், இரு தரப்பு மக்களிடையை கருத்து வேறுபாடு உள்ளதால் சாலை அமைக்கும் திட்டம் குறித்து இருதரப்பினருடனும் கலந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒருமனதாக பணி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com