தேசிய கார் பந்தயம்: வெற்றி பெற்ற ஜோடிகளுக்கு பரிசுக் கோப்பை

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயப் போட்டியில் சேட்டன் சிவராம், திலீப் சரண் ஜோடி முதலிடம் பிடித்தனர்.
கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கேத்தனூர் காற்றாலை கார் பந்தய மைதானத்தில் தேசிய அளவிலான கார் பந்தயம் இந்தியன் நேஷனல் ரேலி 2019 என்ற பெயரில் அண்மையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் சேட்டன் சிவராம், திலீப் சரண் ஜோடி 1:33:51 மணி நேரத்தில் பந்தயத் தூரத்தைக் கடந்து முதல் இடம் பிடித்தனர். யூனஸ் இலியாஸ், ஹரிஷ் கவுடா ஆகியோர் 1.33:56 நிமிடங்களில் இரண்டாம் இடம் பிடித்தனர். பேபிட் அகமது, சனத் ஜோடி 1:34 நிமிடங்களில் கடந்து  மூன்றாம் இடம் பெற்றனர்.
இரண்டாவது பிரிவில் யூனஸ் இலியாஸ், ஹரிஷ் கவுடா ஜோடி 1.33:56 நிமிடங்களில் இலக்கைக் கடந்து முதல் இடம் பிடித்தனர். டீன் மாஸ்கரனாஸ், ஸ்ருப்தா படிவால் ஆகியோர் 1:28 நிமிடங்களில் கடந்து இரண்டாம் இடம் பிடித்தனர். சுஹீம் கபீர், ஜீவா ரத்தினம் ஜோடி 1:40 நிமிடங்களில் கடந்து மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
மூன்றாவது பிரிவில், சேட்டன் சிவராம், திலீப் சரண் ஜோடி, 1:33 நிமிடங்களில் பந்தயத் தூரத்தைக் கடந்து முதல் இடம் பிடித்தனர். பேபட் அகமது, சனத் ஜோடி 1:34 நிமிடங்களில் கடந்து இரண்டாம் இடம் பிடித்தனர். ஆதித்யா தாகூர், வீரேந்தர் காஷ்யப் ஜோடி 1:33 நிமிடங்களில் மூன்றாம் இடம் பிடித்தனர். 
நான்காவது பிரிவில் வைபவ் மராத்தே, அர்ஜுன் ஜோடி, 1:38 நிமிடங்களில் இலக்கைக் கடந்து முதல் இடம் பிடித்தனர். மனோஜ் மகானன், பிரான்சிஸ் சச்சின் 1:39 நிமிடங்களில் கடந்து இரண்டாம் இடம் பிடித்தனர். ரக்ஷித் அய்யர், சந்திரசேகர் ஜோடி 1:40 நிமிடங்களில் கடந்து மூன்றாம் இடத்தைப் பிடித்தனர். எஸ்.யு.வி. சேலஞ்சில் லோகேஷ் கவுடா, சுதிந்திரா ஜோடி முதல் இடம் பிடித்தனர். ஜெகன் கரும்பையா, திம்மு உடபந்தா ஜோடி இரண்டாம் இடம் பிடித்தனர். சஞ்சய் அகர்வால், ஸ்மிதா ஜோடி மூன்றாம் இடத்தைப் பெற்றனர். 
வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com