உடுமலையில் குரூப் 4 மாதிரித் தேர்வு
By DIN | Published On : 19th August 2019 10:29 AM | Last Updated : 19th August 2019 10:29 AM | அ+அ அ- |

உடுமலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மாதிரித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில் ஞாயி ற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இதற்கான மாதிரித் தேர்வு நடைபெற்றது.
கிராமப்புற மாணவர்களின் நலனை முன்னிட்டு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த மாதிரித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாதிரித் தேர்வில் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற முதல் மூன்று நபர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டன. உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், சத்யம் கோச்சிங் சென்டர், வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரிஆகியவை இணைந்து குரூப் 4 இந்தத் தேர்வை ஒருங்கிணைத்திருந்தனர்.