Enable Javscript for better performance
கழிவுகளைக் கொட்டிய லாரிகள் சிறைபிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டபெருமாநல்லூர் அருகே மொய்யாண்டம்பாளையத்தில் மனிதக் கழிவுகளை கொட்ட சென்ற லாரியை பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு சிறைப்பிடித்தனர். 
     பெருமாநல்லூர், ஈட்டிவீராம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் கருக்கன்காட்டுப்புதூர், மொய்யாண்டம்பாளையம், மூட்டியங்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் லாரிகளில் மனிதக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டி வந்தனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தினரிடம் அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் மொய்யாண்டம்பாளையம் அருகே பவர்ஹவுஸ் பகுதியில் மனிதக் கழிவுகளை கொட்டிச் சென்ற லாரியை பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இதையடுத்து அந்த லாரி பெருமாநல்லூர் ஊராட்சி நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்ட பிறகு, கழிவுகளை கொட்டிய வாகன உரிமையாளருக்கு ஆயிரம் ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டது. மேலும் வாகன உரிமையாளர் தரப்பில் மனிதக் கழிவுகள் கொட்டப்பட்ட பகுதியில் தூய்மைப் பணி மேற்கொண்ட பிறகு லாரி விடுவிக்கப்பட்டது.
    பெரியகோட்டை ஊராட்சியில் : உடுமலையை அடுத்துள்ள பெரியகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட இந்திரா நகர், சின்னப்பம்புதூர் செல்லும் சாலையில் கழிவுகளை கொட்ட  வந்த லாரியையும், அதன் ஓட்டுநரையும் அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறைபிடித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
    இப்பகுதியில் மருத்துவக் கழிவுகள், கட்டடக் கழிவுகள், சாக்கடை கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுகிறது. குடிநீரும் மாசுபடுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். 
     இந்நிலையில் உடுமலையில் இருந்து வந்த வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறையினர், ஊராட்சி செயலர் கந்தவடிவேல் உள்ளிட்டோர் லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கழிவுகளை ஏற்றி வந்த லாரியையும், அதன் ஓட்டுநரையும் உடுமலை போலீஸார் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai