Enable Javscript for better performance
மூலனூரில் ரூ.1.12 கோடிக்கு பருத்தி விற்பனை- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ரூ.1.12 கோடிக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது.
     இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பருத்தி விற்பனை நடைபெறும். இந்த வாரம் கிருஷ்ண ஜயந்தி விடுமுறை என்பதால் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், மணப்பாறை, திண்டுக்கல், அரவக்குறிச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 410 விவசாயிகள் தங்களுடைய பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
     இவற்றை வாங்குவதற்காக உடுமலைப்பேட்டை, திருப்பூர், பொள்ளாச்சி, காரமடை, திண்டுக்கல், அன்னூர், தாராபுரம், சேவூர், கொங்கணாபுரம், பழனி, திருச்செங்கோடு, கரூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து 14 வணிகர்கள் வந்திருந்தனர். விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தர்மராஜ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.
     மொத்தம் 5,567 மூட்டைகள் வரத்து இருந்தது. குவிண்டால் ரூ. 5,300 முதல் ரூ. 6,680 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 6,000. இவற்றின் விற்பனைத் தொகை ஒரு கோடியே 12 லட்சத்து 26 ஆயிரத்து 152 ரூபாயாகும்.
     விலை கடந்த வாரத்தை விட குவிண்டாலுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. இத்தகவலை திருப்பூர் விற்பனைக் குழு முதன்மைச் செயலாளர் பாலசந்திரன் தெரிவித்தார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai