Enable Javscript for better performance
ரூ.54.60 கோடியில் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணி: எம்எல்ஏ சு.குணசேகரன் அடிக்க- Dinamani

சுடச்சுட

    

    ரூ.54.60 கோடியில் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணி: எம்எல்ஏ சு.குணசேகரன் அடிக்கல் நாட்டினார்

    By DIN  |   Published on : 24th August 2019 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூர் மாநகராட்சியில் ரூ.54.60 கோடி மதிப்பீட்டில் பழையை பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணியை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார். 
    திருப்பூர் மாநகரின் மத்தியில் உள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், 500-க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் பேருந்துகள் வந்து செல்கின்றன. 
     இந்நிலையில், பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ரூ.36.50 கோடி மதிப்பில் உலகத்தரத்தில் ம று சீரமைப்பு செய்து, புதிதாகக் கட்டப்படுகிறது. மேலும் ரூ.18.10 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடமும் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில்,  திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். மாநகராட்சி உதவி ஆணையர் சபியுல்லா முன்னிலை வகித்தார். 
     புதிதாக அமையவுள்ள திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் தரைத்தளம், முதல் தளம் என இரு தளங்களுடன் அமைக்கப்படுகிறது. பிறைநிலா வடிவில் வணிக வளாகமும், பேருந்துகள் அதை சுற்றிச்செல்லும் வண்ணமும் அமைக்கப்படுகிறது. பேருந்துகள் நிறுத்த அதைச்சுற்றிலும் ரேக்குகள், சர்வதேச தரத்துக்கான தளம், மின் விளக்கு வசதிகள், கழிப்பறைகள், ஓய்வு இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. 
     போக்குவரத்து மாற்றம்: பயணிகளுக்கான பொருள்கள் பாதுகாப்பு அறைகள், வாகன நிறுத்துமிடம், நவீன வடிவமைப்பில் நுழைவாயில், கண்கவர் அலங்கார விளக்குகள் போன்ற சிறப்பான வசதிகள் செய்யப்படுகின்றன. பேருந்துகள் நின்று செல்வதை அறிவிக்கும் வசதி, பயணிகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சோலார் விளக்குகள், புல் தரை, போக்குவரத்து திட்டுகளில் பூச்செடிகள் போன்ற வசதிகள் செய்யப்படவுள்ளன. இதற்கான பணிகள் தொடங்கவுள்ளதால் போக்குவரத்து மற்றும் காவல் துறையினரின் ஆலோசனைப் படி தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
    இந்நிகழ்ச்சியில், உதவிப் பொறியாளர் முனியாண்டி, சுகாதார அலுவலர் பிச்சை, சுகாதார ஆய்வாளர் கோகுல்நாதன், தங்கராஜ் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள், அர்பன் வங்கித் தலைவர் சடையப்பன், முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், கண்ணபிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai