ஏற்றுமதியாளர் சங்கத் தேர்தல்: போட்டியில் இருந்து விலகுவதாக வேட்பாளர்கள் அறிவிப்பு

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தேர்தலில் பொதுச்செயலாளர், இணைச்செயலாளர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர். 

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தேர்தலில் பொதுச்செயலாளர், இணைச்செயலாளர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர். 
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தேர்தல் செப்டம்பர் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் வேட்புமனு தாக்கல்,  வேட்பு மனு வாபஸ், வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியீடு உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளது.
இதில் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டி இல்லை. அதனால், சங்கத் தலைவராக மீண்டும் ராஜாசண்முகம், துணைத் தலைவர்களாக பழனிசாமி, வேலுசாமி, பொருளாளராக மோகன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
20 செயற்குழு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒரு பொதுச்செயலாளர் பதவிக்கு, தற்போது அந்தப் பதவியில் உள்ள விஜயகுமாரை எதிர்த்து குமார், 2 இணைச் செயலாளர் பதவிக்கு, சோமசுந்தரம், செந்தில்குமார், அருண்ராமசாமி, ராஜேந்திரன் ஆகிய 4 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக தெரிவித்த குமார், இணைச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட அருண்ராமசாமி, சோமு ஆகியோர் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com