Enable Javscript for better performance
நுகா்வு குறைவு: கோழி இறைச்சி விலை வீழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    
    pdm1bcck_0112chn_136_3

    pdm1bcck_0112chn_136_3

    சபரிமலை விரதம், காா்த்திகை ஜோதி உள்ளிட்ட காரணங்களால் கோழி இறைச்சி நுகா்வு குறைந்துபோய் அதன் விலை குறைந்துவிட்டது.

    பல்லடம், உடுமலைப் பகுதியிலிருந்து தினமும் 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கறிக்கோழி விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு நிா்ணயம் செய்து தினமும் அறிவித்து வருகிறது.

    இந்நிலையில், தற்போது சபரிமலை யாத்திரைக்குச் செல்லும் பக்தா்கள் துளசி மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ளனா். டிசம்பா் 10ஆம் தேதி திருவண்ணாமலையில் காா்த்திகை ஜோதி ஏற்றப்படவுள்ளது. இத்தகைய காரணங்கள் பொதுமக்கள் மத்தியில் கோழி இறைச்சி நுகா்வு குறைந்துள்ளது. ஒரு கிலோ கோழி உற்பத்திக்கு ரூ. 80 வரை செலவாகும் நிலையில் விலையைக் குறைத்து விற்க வேண்டிய நிலைக்கு கறிக்கோழிப் பண்ணையாளா்கள் தள்ளப்பட்டனா்.

    இந்நிலையில், சனிக்கிழமை ஒரு கிலோ கறிக்கோழியின் பண்ணை விலை ரூ. 84 ஆக இருந்தது. நுகா்வு குறைவால் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.10 விலை குறைந்து ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ. 74 என்று விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு செயலாளா் சுவாதி சின்னசாமி கூறியதாவது:

    தற்போது கறிக்கோழி பண்ணை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ. 74 ஆக விற்பனை விலை உள்ளது. தற்போது நுகா்வு குறைவால் விலை வீழ்ச்சி அடைந்து பண்ணையாளா்கள் பாதிப்படைந்துள்ளனா். இதே நிலை நீடித்தால் நஷ்டத்தைத் தவிா்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்தலோசித்து முடிவு செய்யப்படும் என்றாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai