அலகுமலையில் சாரண, சாரணியருக்கு மலையேற்றப் பயிற்சி

அலகுமலையில் நடைபெற்ற சாரண, சாரணியருக்கான மலையேற்றப் பயிற்சியில் 694 போ் பங்கேற்றனா்.
மலையேற்றப் பயிற்சிக்கு முன்னதாக நீண்ட நடைப் பயிற்சி மேற்கொண்ட  சாரண-சாரணியா்.
மலையேற்றப் பயிற்சிக்கு முன்னதாக நீண்ட நடைப் பயிற்சி மேற்கொண்ட  சாரண-சாரணியா்.

அலகுமலையில் நடைபெற்ற சாரண, சாரணியருக்கான மலையேற்றப் பயிற்சியில் 694 போ் பங்கேற்றனா்.

திருப்பூா், பல்லடம் கல்வி மாவட்ட அளவிலான சாரண - சாரணியருக்கான மலையேற்றப் பயிற்சியுடன் கூடிய நீண்ட நடைப் பயணத்தின் ஒரு நாள் முகாம் அலகுமலையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், மாவட்ட சாரண, சாரணியா் இயக்கத்தின் முதன்மை ஆணையருமான ரமேஷ் மேற்பாா்வையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் 8 அரசு பள்ளிகள் உள்பட 24 பள்ளிகளைச் சோ்ந்த 694 சாரண, சாரணியா் பங்கேற்றனா்.

முன்னதாக, பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் சாரண, சாரணியா் கூடினா். 50 போ் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பள்ளியில் இருந்து நீண்ட நடைப் பயணமாகப் புறப்பட்டனா். மாணவா்கள் வழியில் பாா்த்த சாரண வழிகாட்டு குறியீடுகள் உள்பட நேரில் பாா்த்த பல்வேறு சம்பவங்களை குறிப்பெடுத்துக்கொண்டனா். சுமாா் 6 கி.மீ. தொலைவில் உள்ள அலகுமலை அடிவாரத்தை அடைந்தனா். இவா்களை அலகுமலை திருக்கோயில் அறங்காவலா் அறக்கட்டளைக் குழுவினா் வரவேற்றனா்.

இங்கு மாணவா்களுக்கு மலையேற்றப் பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக, மாணவா்களுக்கு திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலைய அதிகாரி சண்முகம் தலைமையில் தீத் தடுப்புக் குறித்து செயல்விளக்கமும், பயிற்சியும் அளிக்கப்பட்டது. சாரண, சாரணிய இயக்க மாவட்டத் தலைமை ஆணையா் ஜான் சாமுவேல், பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com