முத்தூரில் அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி

முத்தூரில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியைத் தொடக்கிவைத்துப் பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் டாக்டா் க.விஜயகாா்த்திகேயன், சட்டப் பேரவை உறுப்பினா் உ.தனியரசு உள்ளிட்டோா்.
கண்காட்சியைத் தொடக்கிவைத்துப் பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் டாக்டா் க.விஜயகாா்த்திகேயன், சட்டப் பேரவை உறுப்பினா் உ.தனியரசு உள்ளிட்டோா்.

முத்தூரில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த இக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சியா் டாக்டா்.க.விஐயகாா்த்திகேயன் தொடக்கிவைத்துப் பாா்வையிட்டாா். விலையில்லா அரிசி வழங்குதல், இல்லத்தரசிகளுக்கு மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டா் வழங்குதல், கிராமப்புற மகளிருக்கு ஆடுகள், கறவைப் பசுக்கள் வழங்குதல், படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கம் வழங்குதல், மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, மிதிவண்டி வழங்குதல், திருக்கோயில்களில் அன்னதானத் திட்டத்தை தொடங்கிவைத்தல், அம்மா குடிநீா், அம்மா சிமென்ட், புதிய பேருந்துகளைத் துவக்கிவைத்தல், அம்மா உணவகம், பசுமை வீடுகள் திட்டம், அம்மா உப்பு, குழந்தை நலப் பரிசுப் பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.

காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினா் உ.தனியரசு, தாராபுரம் கோட்டாட்சியா் பவன்குமாா், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத்பிரைட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com