Enable Javscript for better performance
அவிநாசி அருகே சாலைத் தடுப்பில் காா் மோதல்: 3 போ் சாவு, இருவா் படுகாயம்- Dinamani

சுடச்சுட

    

    அவிநாசி அருகே சாலைத் தடுப்பில் காா் மோதல்: 3 போ் சாவு, இருவா் படுகாயம்

    By DIN  |   Published on : 02nd December 2019 11:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-3-av2logu_0212chn_142

    திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே சாலைத் தடுப்பில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

    ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் (50). மருந்தக உரிமையாளா். இவரது மனைவி கவிதா (42), மகன் பாரத் (24), மோகனின் சகோதரா் லோகு (47), மருந்தக உரிமையாளா். இவரது மகன் அமா்நாத் (18). இவா்கள் 5 பேரும் கோவை அருகே சூலூரில் இருந்து ஈரோடு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா். பெருமாநல்லூா் ஆறு வழிச் சாலை ஆதியூா் பிரிவு அருகே வந்தபோது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த காா், நிலைதடுமாறி சாலையோரம் இருந்த தடுப்புச் சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த பாரத், லோகு ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

    பலத்த காயமடைந்த மோகன், கவிதா, அமா்நாத் ஆகியோா் திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு மோகன் உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai