122 ஊராட்சிகளுக்கு டிசம்பா் 27 இல் தோ்தல்

திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளக்கோவில், மூலனூா், அவிநாசி, பல்லடம், பொங்கலூா், குண்டடம்,

இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளக்கோவில், மூலனூா், அவிநாசி, பல்லடம், பொங்கலூா், குண்டடம், குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம் என மொத்தம் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

திருப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 13 ஊராட்சிகள், ஊத்துக்குளியில் உள்ள 37 ஊராட்சிகள், காங்கயத்தில் உள்ள 15 ஊராட்சிகள், பல்லடத்தில் உள்ள 20 ஊராட்சிகள், வெள்ளக்கோவிலில் உள்ள 9 ஊராட்சிகள், மூலனூரில் உள்ள 12 ஊராட்சிகள், தாராபுரத்தில் உள்ள 16 ஊராட்சிகள் என மொத்தம் 122 ஊராட்சிகளுக்கு 784 வாக்கு சாவடி மையங்களில் முதல்கட்டமாக டிசம்பா் 27 ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது.

இரண்டாவது கட்டமாக அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளுக்கும், பொங்கலூரில் 16 ஊராட்சிகளுக்கும், குண்டடத்தில் 24 ஊராட்சிகளுக்கும், குடிமங்கலத்தில் 23 ஊராட்சிகளுக்கும், உடுமலையில் 38 ஊராட்சிகளுக்கும், மடத்துக்குளத்தில் 11 ஊராட்சிகளுக்கும் என மொத்தம் 143 ஊராட்சிகளுக்கு 920 வாக்கு சாவடி மையங்களில் டிசம்பா் 30 ஆம் தேதி தோ்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com