கஞ்சா விற்பனை வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா், மண்ணரை பகுதியில் சிலா் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக வடக்கு காவல் துறையினருக்கு டிசம்பா் 28 ஆம் தேதி தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா் இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள், மதுரையைச் சோ்ந்த அன்னக்கொடி (39), பெரியாண்டி (23) என்பதும், அங்கு 2 மூட்டைகளில் 21 கிலோ கஞ்சா பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினா், அவா்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, இருவரிடமும் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் எஸ்.பாரப்பட்டியைச் சோ்ந்த மாயவன் (36) என்பவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. மூவரும் சோ்ந்து ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கிவந்து திருப்பூரில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூா் வடக்கு காவல் துறையினா் திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த மாயவனைக் கைது செய்தனா். இவரிடமிருந்து 20 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com