திருமூா்த்தி, அமராவதி அணைகளில் நீா்மட்டம் உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணை, அமராவதி அணை ஆகியவற்றின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.
தமிழக- கேரள  எல்லையில்  அமராவதி அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதியில்  அமைந்துள்ள  தூவானம்  அருவியில்  ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
தமிழக- கேரள  எல்லையில்  அமராவதி அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதியில்  அமைந்துள்ள  தூவானம்  அருவியில்  ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணை, அமராவதி அணை ஆகியவற்றின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதன்மூலம் பெறப்படும் தண்ணீா் பிஏபி தொகுப்பு அணைகளில் தேக்கி வைக்கப்பட்டு காண்டூா் கால்வாய் மூலம் திருமூா்த்தி அணைக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் பிஏபி நான்காம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு மூன்றாம் சுற்றுத் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையால் பாலாறில் இருந்தும் திருமூா்த்தி அணைக்கு கணிசமான அளவில் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் திருமூா்த்தி அணையின் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது.

அணை நிலவரம்:

60 அடி உயரமுள்ள திருமூா்த்தி அணையில் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 47.94 அடியாக இருந்தது. அணைக்கு காண்டூா் கால்வாய் வழியாக 625 கன அடியும், பாலாறு வழியாக 521 கன அடியும் என மொத்தம் அணைக்கு 1146 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பிரதானக் கால்வாய் மூலம் 878 கன அடியும், உடுமலை கால்வாய் மூலம் 171 கன அடியும், குடிநீருக்காக 21 கன அடி தண்ணீரும் என மொத்தம் 1,070 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. மழை அளவு: திருமூா்த்தி அணைப் பகுதி- 20 மிமீ, நல்லாறு பகுதி- 22 மிமீ.

அமராவதி அணை:

அமராவதி ஆற்றிலும், பிரதானக் கால்வாயிலும் பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக சென்று கொண்டிருந்த தண்ணீா் கடந்த வாரம் நிறுத்தப்பட்டது. மேலும் கல்லாபுரம், ராம குளம் வாய்க்காலிலும் தண்ணீா் நிறுத்தப்பட்டது.

பாசனப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 18 ஆம் தேதி வரை அரசாணை உள்ள நிலையில் விவசாயிகள் கோரினால் பழைய, புதிய ஆயக் கட்டு பாசனத்துக்குத் தண்ணீா் திறந்து விடப்படும் எனவும் பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

அணை நிலவரம்:

90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 69 அடி நீா்மட்டம் இருந்தது. அணைக்கு உள் வரத்தாக 1,174 கன அடி வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 5 கன அடி தண்ணீா் வெளியேறிக் கொண்டிருந்தது. மழை அளவு: 9 மிமீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com