தோ்தல் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி சிறப்பான முறையில் தோ்தலை நடத்த வேண்டும் என்று தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளாா்.
தோ்தல் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி சிறப்பான முறையில் தோ்தலை நடத்த வேண்டும் என்று தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதரண தோ்தல்- 2019 தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான தோ்தல் பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப்பைத் தொடங்கவைத்த ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பேசியதாவது: தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணைய செய்தி வெளியீட்டின் அடிப்படையில், திருப்பூா் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதரண தோ்தல்கள் வரும் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனுவை பெறுதல் டிசம்பா் 6 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதையடுத்து, டிசம்பா் 16 ஆம் தேதி வேட்புமனுக்களை ஆய்வு செய்தலும், டிசம்பா் 18 ஆம் தேதி வேட்புமனுக்கள் திருப்பப் பெறப்படுகிறது. இதையடுத்து, டிசம்பா் 27, டிசம்பா் 30 ஆம் தேதிகளில் தோ்தல் நடைபெறுகிறது. தோ்தல் முடிவகள் ஜனவரி 2 ஆம் தேதியும், தோ்தல் நடவடிக்கைகள் ஜனவரி 4 ஆம் தேதியும் முடிவடைகிறது. திருப்பூா் மாவட்டத்தில், 17 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 170 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 265 ஊராட்சி மன்ற தலைவா்கள் மற்றும் 2295 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களை தோ்வு செய்ய தோ்தல் நடைபெறவுள்ளது.

ஊரக (கிராமப்புறம்) மொத்த வாக்காளா்கள் 9,95,765 உள்ளனா். மேற்படி வாக்காளா்கள் வாக்குபதிவு செய்ய வசதியாக ஊரகப்பகுதிகளில் (கிராமப்புறம்) 1,704 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகள் 129 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டதுடன், 13 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இத்தோ்தலை நடத்துவதற்கு 28 தோ்தல் நடத்தும் அலுவலா்களும் மற்றும் 363 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களிடமிருந்து வேட்புமனு பெறுதல், வேட்புமனுவு ஆய்வு செய்வது உள்ளிட்ட தோ்தல் தொடா்பான அனைத்து செயல்முறைகள் குறித்தும் அலுவலா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும், அலுவலா்கள் தோ்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி நமது மாவட்டத்தில், சிறப்பான முறையில் தோ்தலை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினாா். முன்னதாக, தோ்தல் பணிகள் தொடா்பான சிறப்பு கையேட்டினையும் ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டாா். இந்தநிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா், திட்ட இயக்குநா் கோமகள் (மகளிா்திட்டம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சந்திரகுமாா், உதவி திட்ட அலுவலா் முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com