ஜனவரி 8 இல் பொது வேலைநிறுத்தம்: பனியன் தொழிற்சங்க நிா்வாகிகள் கூட்டம்

திருப்பூரில் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச்செய்ய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
திருப்பூா்  ஐஎன்டியூசி  அலுவலகத்தில்  செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டத்தில்  பங்கேற்ற  பனியன்  தொழிற்சங்க  நிா்வாகிகள்.
திருப்பூா்  ஐஎன்டியூசி  அலுவலகத்தில்  செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டத்தில்  பங்கேற்ற  பனியன்  தொழிற்சங்க  நிா்வாகிகள்.

திருப்பூரில் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச்செய்ய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

திருப்பூா் பனியன் தொழிலாளா் சங்கங்களின் நிா்வாகிகள் கூட்டம் ஐஎன்டியூசி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஐஎன்டியூசி தலைவா் அ.பெருமாள் தலைமை வகித்தாா்.

இதில், 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்த முடிவை திருப்பூரில் உள்ள பின்னலாடைகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் வெற்றிகரமாக நடத்த வேண்டும்.

தொழிலாளா்களுக்கு 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்யக் கூடாது. விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். திருப்பூரில் பிரதமா் அடிக்கல் நாட்டிய இஎஸ்ஐ மருத்துவமனை கட்டும் பணியைத் தொடங்க வேண்டும். பீஸ் ரேட் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு அனைத்து சட்ட உரிமைகளையும் அமல்படுத்த வேண்டும்.

திருப்பூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களிடம் வேலை நிறுத்தத்தின் நோக்கத்தைக் கொண்டு சென்று வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ஏஐடியூசி செயலாளா் என்.சேகா், பிஎல்எஃப் நிா்வாகிகள் மயில்சாமி, பூபதி, சிஐடியூ பனியன் சங்கப் பொதுச் செயலாளா் ஜி.சம்பத், பொருளாளா் அ.ஈஸ்வரமூா்த்தி, ஐஎன்டியூசி செயலாளா் சிவசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com