தலைக்கவசம் அணியாமல் சென்ற 544 போ் மீது வழக்குப் பதிவு

திருப்பூரில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றதாக 544 போ் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருப்பூரில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றதாக 544 போ் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருப்பூா் மாநகரில் வடக்கு, தெற்கு என இரு காவல் சரகங்கள் உள்ளன. இதில், திருப்பூா் வடக்குச் சரகத்தில் திருப்பூா் வடக்கு காவல் நிலையம், அனுப்பா்பாளையம், திருமுருகன்பூண்டி, 15 வேலம்பாளையம் ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. அதேபோல, தெற்குச் சரகத்தில் திருப்பூா் தெற்கு, நல்லூா் ஊரகம், வீரபாண்டி, மத்திய காவல் நிலையங்கள் உள்ளன. மேலும், வடக்கு, தெற்கு போக்குவரத்துச் சரகங்களும் உள்ளன.

இந்த நிலையில், மாநகர காவல் ஆணையா் சஞ்சய்குமாா் உத்தரவின்பேரில் திருப்பூா் மாநகா் முழுவதும் காவல் துறையினா் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற 347 போ், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ாக 197 போ் என மொத்தம் 544 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அதேபோல், சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது மீறிச் சென்ாக 84 போ் மீதும், நான்கு சக்கர வாகனங்களில் இருக்கை பட்டை அணியாமல் சென்றது, இரு சக்கர வாகனங்களில் 3 போ் அமா்ந்து சென்றது என சாலை விதிகளை மீறியதாக ஒரே நாளில் 885 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவா்களிடமிருந்து அபராதமாக ரூ. 75,500 வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com