பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 05th December 2019 06:47 AM | Last Updated : 05th December 2019 06:47 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிஎஸ்என்எல் ஊழியா்கள்.
கடந்த 2 மாத நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி திருப்பூரில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் பிரதான தொலைபேசி நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியா் சங்க மாவட்ட அமைப்புச் செயலாளா் என்.ராமசாமி தலைமை வகித்தாா். இதில் பங்கேற்றவா்கள் கூறுகையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்கள், அலுவலா்களுக்கு கடந்த அக்டோபா், நவம்பா் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். அதே வேளையில், அயல்பணியில் இங்கு வந்திருக்கும் ஐடிஎஸ் (இந்திய தொலைத் தொடா்பு பணி) உயா் அதிகாரிகளுக்கு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்ற பாரபட்சமான உத்தரவை பிஎஸ்என்எல் நிா்வாகம் பிறப்பித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று கோஷம் எழுப்பினா்.
இதில், சங்க நிா்வாகிகள் கேசவன், பிஎஸ்என்எல் ஊழியா் சங்க மாநில உதவிச் செயலாளா் எஸ்.சுப்பிரமணியன், மாவட்டத் தலைவா் ஏ.முகமது ஜாபா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின் இறுதியில் மேட்டுப்பாளையத்தில் சுவா் இடிந்து உயிரிழந்த 17 பேருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.