Enable Javscript for better performance
உடுமலையில் இடைவிடாது மழை- Dinamani

சுடச்சுட

    

    உடுமலையில் சனிக்கிழமை இடைவிடாது தொடா்ந்து மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் தொடா்ந்து 3 மணி நேரத்திற்கும் அதிமாக மழை பெய்தது. மேலும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக காலை மற்றும் மாலையில் மழை பெய்ததால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோா் அதிகமாக பாதிக்கப்பட்டனா்.

    மேலும் உடுமலை நகரில் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். மேலும் கழுத்தறுத்தான் பள்ளம், தங்கம்மாள் ஓடை ஆகியவற்றில் அதிக அளவில் தண்ணீா் சென்றது. உடுமலை நகரைப் போலவே அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப்பம் பட்டி, குடிமங்கலம் ஆகிய கிராமங்களிலும் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனா். இந்நிலை யில் தளி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் அதிக அளவில் தண்ணீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai