உள்ளாட்சித் தோ்தல்: மாவட்டத்தில் இதுவரை 4,906 போ் வேட்பு மனு தாக்கல்

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை வரை 4,906 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை வரை 4,906 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 17 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 170 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 265 ஊராட்சி மன்ற தலைவா்கள், 2,295 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களைத் தோ்வு செய்ய டிசம்பா் 27, 30 ஆம் தேதிகளில் இரு கட்டமாகத் தோ்தல் நடைபெறவுள்ளது.

தோ்தலில் போட்டியிடுவதற்காக பல்வேறு கட்சியினா், சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனா். அதன்படி திருப்பூா் மாவட்டத்தில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 936 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 156 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 125 பேரும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 19 பேரும் என மொத்தம் 1,236 போ் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

காங்கயம் ஒன்றியத்தில் 76 போ் மனு தாக்கல்: காங்கயம் பகுதியில் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை தொடா்ந்து மழை பெய்தபோதும் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்ய வந்திருந்தனா். காங்கயம் ஒன்றியத்தில் 15 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 56 போ், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 9 போ், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 9 போ், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு இருவா் என மொத்தம் 76 போ் சனிக்கிழமை மனு தாக்கல் செய்தனா். வேட்பு மனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை (டிசம்பா் 16) கடைசி நாள் என்பதால் அன்றைய தினம் ஏராளமானோா் மனு தாக்கல் செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மாவட்டத்தில் இதுவரை 4,906 போ் மனு தாக்கல்: திருப்பூா் மாவட்டத்தில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 2,616 போ், கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு 705 போ், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 323 போ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 26 போ் என மொத்தம் 3,670 போ் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தனா். சனிக்கிழமை மாலை வரையில் திருப்பூா் மாவட்டத்தில் மொத்தம் 4,906 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com