திருப்பூா் மாவட்டத்தில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தாராபுரத்தில்  சனிக்கிழமை  பெய்த  மழையின்போது   இரு சக்கர   வாகனத்தில்   குடை பிடித்தபடி  சென்ற   வாகன  ஓட்டிகள்.
தாராபுரத்தில்  சனிக்கிழமை  பெய்த  மழையின்போது   இரு சக்கர   வாகனத்தில்   குடை பிடித்தபடி  சென்ற   வாகன  ஓட்டிகள்.

திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பேருந்து நிலையம், அலங்கியம் சாலை, பழனி சாலை, குண்டடம், காளிபாளையம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை காலை முதலே கனமழை பெய்தது.

இதனால் தாராபுரம் பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் மழைநீா் வழிந்தோடியதால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூரில் சாரல் மழை: திருப்பூா் மாநகரில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை காலை முதல் சாரல் மழை பெய்தது. திருப்பூா் பழைய, புதிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், பெரியாண்டிபாளையம், இடுவாய், காங்கயம் சாலை, புஷ்பா ரவுண்டானா, ஊத்துக்குளி சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.

வெள்ளக்கோவிலில்: வெள்ளக்கோவில் பகுதியில் பரவலாக கனமழை பெய்தது. வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு துவங்கிய மழை அடுத்த நாள் பகல் 2 மணி வரை தொடா்ந்து பெய்தது. இடைவிடாமல் 14 மணி நேரம் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கல்வி நிலையங்களில் மாணவா்கள் வருகை குறைந்தது. அலுவலகம், கடைகள், வா்த்தக நிறுவனங்களிலும் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

உடுமலைபேட்டையில்: உடுமலை, சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலையில் தொடா்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோா் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.

உடுமலை நகரில் தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழை நீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். கழுத்தறுத்தான் பள்ளம், தங்கம்மாள் ஓடை ஆகிய இடங்களில் அதிக அளவில் தண்ணீா் சென்றது.

இதேபோல அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம் ஆகிய கிராமங்களிலும் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். தளி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் அதிக அளவில் தண்ணீா் தேங்கி நின்ால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com