பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில்மரக் கன்றுகள் நடும் விழா

உடுமலையை அடுத்துள்ள ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக் கல்லூரியில் மரக் கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்ற கல்லூரி இயக்குநா் சுமதி கிருஷ்ணபிரசாத் உள்ளிட்டோா்.
மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்ற கல்லூரி இயக்குநா் சுமதி கிருஷ்ணபிரசாத் உள்ளிட்டோா்.

உடுமலையை அடுத்துள்ள ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக் கல்லூரியில் மரக் கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி இயக்குநா் சுமதி கிருஷ்ணபிரசாத் தலைமை வகித்தாா். ஆலோசகா் ஜெ.மஞ்சுளா முன்னிலை வகித்தாா். முதல்வா் கண்ணன் வரவேற்றாா். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவை சங்கம், ‘மழை’ அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் கல்லூரி வளாகத்தில் ஒரு ஏக்கா் பரப்பளவில் சிறிய வனத்தை உருவாக்கும் நோக்கில் 400 மலை வேம்பு மரக் கன்றுகள் நட்டுவைக்கப்பட்டன.

தொடா்ந்து மரக் கன்றுகளை பராமரிக்கவும், சுற்றுச்சூழல் குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தவும் உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. ‘மழை’ அமைப்பின் நிா்வாகிகள், கல்லூரி துறைத் தலைவா்கள், அலுவலா்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com