மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்கள் 2006, வன உரிமைச் சட்டப்படி தங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்கள் 2006, வன உரிமைச் சட்டப்படி தங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டக் குழுக் கூட்டம் உடுமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் என்.முருகன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ஆா். மதுசூதனன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்கள், இதர பாரம்பரியமாக வனங்களில் வசிப்போருக்கு 2006, வன உரிமைச் சட்டப்படி நில அளவை செய்யப்பட்ட நிலங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி உடுமலை கோட்டாட்சியரிடம் பல முறை வலியுறுத்தப்பட்டது. ஆனால் இப் பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நில அளவை செய்யப்பட்டு ஓராண்டாகியும் தனி நபா் பட்டாவும், சமூக உரிமையும் வழங்காமல் காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. எனவே 2006, வன உரிமைச் சட்டப்படி மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி 2020 ஜனவரி, முதல் வாரத்தில் உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலக த்தின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்து என்பன உள்ள பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாநில துணைச் செயலாளா் செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com