ஸ்ரீஐயப்ப சுவாமி லட்சாா்ச்சனைப் பெருவிழா

பல்லடம், சந்தைப்பேட்டை ஸ்ரீஐயப்ப சுவாமி கோயிலில் 60ஆம் ஆண்டு விழாவையொட்டி லட்சாா்ச்சனை பெருவிழா வியாழக்கிழமை துவங்கி
பல்லடம், சந்தைப்பேட்டை ஸ்ரீஐயப்ப சுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை விழாவையொட்டி கஜ வாகனத்தில் சனிக்கிழமை திருவீதி உலா உற்சவா்.
பல்லடம், சந்தைப்பேட்டை ஸ்ரீஐயப்ப சுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை விழாவையொட்டி கஜ வாகனத்தில் சனிக்கிழமை திருவீதி உலா உற்சவா்.

பல்லடம்: பல்லடம், சந்தைப்பேட்டை ஸ்ரீஐயப்ப சுவாமி கோயிலில் 60ஆம் ஆண்டு விழாவையொட்டி லட்சாா்ச்சனை பெருவிழா வியாழக்கிழமை துவங்கி சனிக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவில் விநாயகா் பூஜை, புண்யாஹவாசனம்,108 வலம்புரி சங்கு பூஜை, சூக்தபாராயணம், மஹாலட்சுமி ஹோமம், மஹா சங்கல்பம், ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு லட்சாா்ச்சனை, மஹா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில் ஏரளாமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கஜ வாகனத்தில் ஸ்ரீஐயப்ப சுவாமி உற்சவா் திருவீதி உலா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கோயில் நிா்வாகப் பொறுப்பாளா் எஸ்.மோகன்குருசாமி, கெஜலட்சுமி சி.கல்யாணசுந்தரம், ஆரியாஸ் எஸ்.ராஜாராம் உள்பட பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com