Enable Javscript for better performance
16ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    16ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா தொடக்கம்

    By DIN  |   Published on : 01st February 2019 06:55 AM  |   அ+அ அ-   |    |  

    திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் ஆகியன இணைந்து நடத்தும் 16 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. 
    16 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள பத்மினி கார்டனில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த விழா பிப்ரவரி 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், மொத்தம் 144 அரங்குகளில் பல முன்னணி பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 
    இந்நிலையில் இந்த புத்தகத் திருவிழாவை தொடங்கிவைத்து கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
    புத்தகத் திருவிழாவானது நல்ல பண்பாட்டு நிகழ்வாகத் திகழ்கிறது.  அறிவு வளர்ச்சிக்கு புத்தகங்கள் உதவும். இந்த புத்தகக் கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவசியம் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி பயனடைய வேண்டும்.  மேலும், இந்த கண்காட்சியை நடத்துவோருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றார். 
    விழாவில் முதல் விற்பனையைப் பெற்றுக் கொண்ட திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் பேசுகையில், "இன்றைய சூழலில் செல்லிடப்பேசி தகவல் தொழில்நுட்பம் தவறான வழியில் இளைஞர்கள் திசை திருப்பக்கூடியதாக இருக்கிறது.  ஆனால் புத்தகங்கள் வாசிப்பது ஆரோக்கியமான நல்ல சக்தியை அளிப்பதாக இருக்கும்' என்றார். 
    புத்தகத் திருவிழாவில், முதல் விற்பனையில்  புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினர் உ.தனியரசு பேசுகையில், "திருப்பூர் பகுத்தறிவு சிந்தனை, தேசிய விடுதலை இயக்கம் மற்றும் பொதுவுடைமை இயக்க கருத்துகள் வளமாக வேரூன்றியுள்ள மண்ணாகும். வேறுபாடுகளைக் களைந்து மனிதர்களை ஒன்றிணைக்கும் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய அம்சங்களை புத்தக வாசிப்பின் மூலம் இளைய தலைமுறை பெற முடியும். குறுந்தகவல்களை பார்ப்பதை விட சிறிய புத்தகங்களை வாசிப்பதன் மூலமாக அதிக பயன் பெறலாம்' என்றார். இதைத் தொடர்ந்து நிமிர்வு கலைக்குழுவினரின் 100 பறையிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 
    இந்த நிகழ்ச்சியில்,  மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, திருப்பூர் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், பாரதி புத்தகாலயம் மேலாளர் சிராஜ், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் துணைத் தலைவர் மைக்கோ வேலுசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம், திருப்பூர் சக்தி திரையரங்க உரிமையாளர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp