தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி: அவிநாசி சிறுவன் தங்கம் வென்று சாதனை
By DIN | Published On : 02nd February 2019 08:01 AM | Last Updated : 02nd February 2019 08:01 AM | அ+அ அ- |

தேசிய அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் அவிநாசியைச் சேர்ந்த சிறுவன் தொடர்ந்து 2 முறை முதலிடம் பிடித்து தங்கம் வென்று சாதனை படைத்தார்.
கோவாவில் கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற விளையாட்டு மற்றும் காலசார திருவிழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர். இதில் அவிநாசி அருகே கருக்கபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் சஞ்சய் சுப்பிரமணியம் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் மற்றும் ரூ.75ஆயிரம் பரிசு வென்றார். இதேபோல 2018 ஆம் ஆண்டு ஹரியாணாவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியிலும் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மேலும், இந்த ஆண்டு ஹாங்காங்கில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க இவர் தேர்வு செய்யபட்டுள்ளார்.