மூலனூர் விற்பனைக் கூடத்தில் ரூ.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
By DIN | Published On : 02nd February 2019 08:02 AM | Last Updated : 02nd February 2019 08:02 AM | அ+அ அ- |

மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வெள்ளிக்கிழமை நடந்தது.
இந்த வார ஏலத்துக்கு தாராபுரம், சின்னதாராபுரம், கரூர், அரவக்குறிச்சி, திண்டுக்கல், மணப்பாறை, கிளாங்குண்டல், உடுமலைப்பேட்டை, பெரம்பலூர், மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 240 விவசாயிகள் தங்களுடைய பருத்தியை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனர்.
திருப்பூர், பொள்ளாச்சி, திண்டுக்கல், காரமடை, உடுமலைப்பேட்டை, அன்னூர், தாராபுரம், சேவூர், கொங்கனாபுரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து 10 வணிகர்கள் பருத்தி வாங்குவதற்காக வந்திருந்தனர். விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தர்மராஜ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில் ஒரு குவிண்டால் ரூ.5000 முதல் ரூ.6040 வரை விற்பனையானது.
சராசரி விலை ரூ.5600. இவற்றின் விற்பனைத் தொகை ரூ.50 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டன.