சாலையோர புளிய மரங்களில் விளைச்சல் குறைவு

பல்லடம் வட்டாரத்தில் சாலையோர புளிய மரங்களில் நடப்பு ஆண்டு விளைச்சல் குறைந்துள்ளது.

பல்லடம் வட்டாரத்தில் சாலையோர புளிய மரங்களில் நடப்பு ஆண்டு விளைச்சல் குறைந்துள்ளது.
பல்லடம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சாலையோரங்களில் பராமரிக்கப்படும் புளிய மரங்கள் ஒப்பந்ததாரர்களால் ஆண்டு குத்தகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுகிறது. பல்லடத்தில் இருந்து  தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி, மங்கலம், செட்டிபாளையம், கோவை ஆகிய பிரதான சாலைகள், கிராமப்புற சாலைகளில் சாலையோரங்களில் உள்ள நூற்றுக்கணக்கான புளிய மரங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.
இது குறித்து ஒப்பந்ததாரர் கூறியதாவது: பல்லடம் -காமநாயக்கன்பாளையம் வரையிலான சாலையில் 400க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் உள்ளன. மரத்துக்கு 100 கிலோ வரை புளி கிடைக்கும். தற்போது விளைச்சல் குறைந்து 80 கிலோ மட்டுமே கிடைக்கிறது. கிலோ ரூ.15 வரை விற்பைனையாகிறது. நடப்பு ஆண்டு விளைச்சல் குறைவால் வரத்துக் குறைந்து வருவாய் குறைந்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com