தேசிய அறிவியல் தின திறனறிப் போட்டி: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

தேசிய அறிவியல் தினத்தை (பிப்ரவரி 28) முன்னிட்டு நடைபெறும் திறனறிப் போட்டிகளில் பங்கேற்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அறிவியல் தினத்தை (பிப்ரவரி 28) முன்னிட்டு நடைபெறும் திறனறிப் போட்டிகளில் பங்கேற்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை சுற்றுச் சூழல் சங்கம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், கலிலியோ அறிவியல் கழகம் ஆகியவற்றின் சார்பில் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 23ஆம் தேதி (சனிக்கிழமை)  திறனறிப் போட்டிகள் நடைபெற உள்ளன. அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்க்கும் பொருட்டு கீழ்காணும் போட்டிகள் நடைபெற உள்ளன. 
போட்டிகள் விவரம்:
விநாடி-வினா:  6, 7, 8ஆம் வகுப்புகள்,  9, 10ஆ ம் வகுப்புகள்,  11,12ஆ ம் வகுப்புகள் என  மூன்று பிரிவுகளாக விநாடி-வினா போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு குழுவுக்கு 3 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.
பேச்சுப் போட்டி: தலைப்பு- பள்ளித் தூய்மையில் உனது பங்கு (3, 4, 5ஆம் வகுப்புகள்),  தலைப்பு-மனிதனின் சுயநலமும், வன விலங்குகளின் துயரமும்  ( 6, 7, 8ஆ ம் வகுப்புகள்), தலைப்பு- உணவு  நேற்று, இன்று, நாளை ( 9, 10ஆ ம் வகுப்புகள்)
தலைப்பு- வானை அளப்போம், கடல் மீனை அளப்போம் ( 11,12ஆ ம் வகுப்புகள்).
கட்டுரைப் போட்டி: தலைப்பு-நீர் மேலாண்மையில் உனது பங்கு ( 6, 7, 8 ஆம் வகுப்புகள்), தலைப்பு-நீ விரும்பும் தமிழக விஞ்ஞானி ( 9,10ஆம் வகுப்புகள்), தலைப்பு-20ஆம் நூற்றாண்டில் மின்னணு சாதனங்களின் இணையற்ற பங்கு ( 11,12ஆ ம் வகுப்புகள்).
ஓவியப் போட்டி: தலைப்பு- சிட்டாய் பறக்கும் சிட்டுக் குருவி ( 3, 4, 5 ஆம் வகுப்புகள்), தலைப்பு-தூய்மை இந்தியா-உனது பார்வையில் ( 6, 7, 8ஆம் வகுப்புகள்), தலைப்பு-விண்வெளி அற்புதங்கள் ( 9, 10 ஆம் வகுப்புகள்),  தலைப்பு- உனக்குப் பிடித்த விஞ்ஞானி ( 11, 12ஆ ம் வகுப்புகள்).
அறிவியல் விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளிகளுக்கு கேடயங்களும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. போட்டிகளில் பங்கேற்க உள்ளவர்கள் 22.02.19ஆம் தேதிக்குள் கீழ்க்காணும் இ-மெயில் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். 
இ-மெயில் முகவரி: ‌ka‌n‌n​a‌t‌n‌s‌f‌u‌d‌t@‌g‌m​a‌i‌l.​c‌o‌m கலிலியோ அறிவியல் கழகம், பி-7 வித்யாசாகர் வீதி, காந்தி நகர் (அஞ்சல்) உடுமலை வட்டம் பின்கோடு-642154. 
தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண்கள்: 8778201926, 9942467764,
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com