3 நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை திறப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் 3 புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ளன.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் 3 புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ளன.
இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் தற்சமயம் அறுவடை நிலையில் உள்ளது. இந்த நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் அலங்கியம், சிக்கினாபுரம், சத்திரம் (கோவிந்தாபுரம்) ஆகிய இடங்களில் வரும் வெள்ளிக்கிழமை முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
இதில், சன்ன ரகம் கிலோ ரூ.18.40க்கும், இதர ரகங்கள் ரூ.18க்கும் கொள்முதல் செய்யப்படும். மேலும், கொள்முதலுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்குக்கு மின்னணுப் பரிவர்த்தனை மூலமாகப் பரிமாற்றம் செய்யப்படும். ஆகவே, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைப் பயன்படுத்தி மேற்சொன்ன விலைக்கு விற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com