அவிநாசியில் ரூ. 71 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
By DIN | Published On : 14th February 2019 07:46 AM | Last Updated : 14th February 2019 07:46 AM | அ+அ அ- |

அவிநாசியில் புதன்கிழமை நடைபெற்றற பருத்தி ஏலத்தில் ரூ. 71.70 லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றறது.
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் வரத்து அதிகரித்து 4,050 மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. ஆர்.சி.எச் ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 5,000 முதல் ரூ. 5,460 வரையிலும், டி.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 6,000 முதல் ரூ. 6,570
வரையிலும், மட்ட ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரையிலும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 71 லட்சத்து 70 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.