முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு நாள்
By DIN | Published On : 28th February 2019 08:20 AM | Last Updated : 28th February 2019 08:20 AM | அ+அ அ- |

உடுமலை எஸ்கேபி மேல்நிலைப் பள்ளியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நாள் புதன்கிழமை நடைபெற்றது.
உணவு பாதுகாப்பு துறை மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு
பள்ளிச் செயலர் கேஆர்கே.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியை கே.டி.பூரணி முன்னிலை வகித்தார். இதில் உணவு பாதுகாப்பு மற்றும் கலப்படம் இல்லா உணவுப் பொருள்கள் குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையைச் சேர்ந்த எஸ்.அம்ஜத் இப்ராஹீம்கான் மாணவ, மாணவியருக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் அவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். உதவி தலைமை ஆசிரியர் ஏ.அக்பர் அலி நன்றி கூறினார்.