முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது சிறுவன் சாவு
By DIN | Published On : 28th February 2019 08:24 AM | Last Updated : 28th February 2019 08:24 AM | அ+அ அ- |

திருப்பூரில் 60 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் பரிதாபமாக புதன்கிழமை உயிரிழந்தார்.
திருப்பூர், புஷ்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆசிக்அலி (32). இவரது மனைவி பாத்திமா(29). இந்த தம்பதிக்கு முகம்மது தஸ்லின் (3), தவ்பிக் (7) என இரு மகன்கள் இருந்தனர். இவர்கள் வீட்டின் உள்புறத்தில் உள்ள 60 அடி ஆழக் கிணற்றில் 40 அடிக்குத் தண்ணீர் உள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் இதில் புதன்கிழமை தண்ணீர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அப்போது அருகில் விளையாடிக் கொண்டிருந்த முகமது தஸ்லின் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் கொடுத்த தகவலின்படி திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவனை மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட சிறுவனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை நடத்திய மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.