முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
பல்லடத்தில் ரூ.180 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் துவக்கம்
By DIN | Published On : 28th February 2019 08:23 AM | Last Updated : 28th February 2019 08:23 AM | அ+அ அ- |

பல்லடம் நகராட்சி பகுதியில் ரூ.180 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் புதன்கிழமை துவக்கி வைக்கப்பட்டுள்ளன.
பல்லடம் நகராட்சி வார்டு எண் 7ல் அபிராமி நகரில் ரூ. 40 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைத்தல், வார்டு எண் 10, 11 ஹாஸ்டல் சாலை முதல் கொசவம்பாளையம் சாலை வரை ரூ.30லட்சம் மதிப்பில் தார் சாலை அமைத்தல், வார்டு எண் 17, 18 மங்கலம் சாலையில் ரூ.9.90 லட்சம் மதிப்பில் மழை நீர் வடிகால் கட்டுதல், வார்டு எண் 3 தெற்குபாளையத்தில் ரூ.4.90 லட்சம் மதிப்பில் மழை நீர் வடிகால் மற்றும் சிறுபாலம் கட்டுதல் பணி நடைபெற உள்ளது.
மேலும், வார்டு எண் 1கல்லம்பாளையம் காலனியில் ரூ.5.20 லட்சம் மதிப்பில் மழை நீர் வடிகால் மற்றும் கழிவு நீர் தொட்டி கட்டும் பணி, வார்டு எண் 1 மேற்கு கல்லம்பாளையத்தில் ரூ.6.30லட்சம் மதிப்பில் மழை நீர் வடிகால் மற்றும் சிறுபாலம் கட்டுதல் என மொத்தம் ரூ.1கோடியே 80 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் செய்திட புதன்கிழமை பூமி பூஜை நடத்தி பணிகளை பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் துவக்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையாளர் எஸ்.எஸ்.சுரேஷ்குமார், பொறியாளர் சங்கர், சுகாதார ஆய்வாளர் சங்கர், பணி மேற்பார்வையாளர் நாகராஜ், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், நகராட்சி முன்னாள் தலைவர் சரளை பி.ரத்தினசாமி, கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஏ.சித்துராஜ்,
ஏ.எம்.ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.