முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
பல்லடம் பகுதியில் மக்காச்சோளம் விளைச்சல் குறைந்தது
By DIN | Published On : 28th February 2019 08:20 AM | Last Updated : 28th February 2019 08:20 AM | அ+அ அ- |

பல்லடம் பகுதியில் புழு தாக்குதலால் மக்காச்சோள விளைச்சல் குறைந்து வருகிறது. அதனால் பல்லடம் வட்டார விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
பல்லடம் வட்டாரத்தில் மக்காச்சோளம், துவரை, உளுந்து உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மக்காச்சோளத்தில் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியாததால் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது:
படைப் புழு தாக்குவதால் பயிர்கள் கடுமையாக பாதிப்படைகின்றன. பயிர்களின் நீர்ச் சத்து முற்றிலுமாக உறிஞ்சப்படுகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கிறது. வேளாண்மை துறையினர் அறிவுறுத்தல்படி இயற்கை மற்றும் செயற்கை மருந்து பயன்படுத்தியும் பயனில்லை.
கட்டுக்கடங்காத புழுக்களின் தாக்குதலால் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏக்கருக்கு 30 மூட்டை மக்காச்சோளம் கிடைத்து வந்த நிலையில் தற்போது புழு தாக்குதலால் 15 மூட்டை மட்டுமே மகசூல் கிடைக்கிறது.
தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி கிலோ ரூ. 25 வரை விலை கிடைக்கிறது. இது கட்டுப்படியாகும் விலை தான் என்றாலும் அதே சமயம் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகளுக்கு வருமானம் பெரிதும் குறைந்துள்ளது என்றனர்.