முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
ரூ.10.79 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
By DIN | Published On : 28th February 2019 08:22 AM | Last Updated : 28th February 2019 08:22 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.79 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
இங்கு வாரந்தோறும் புதன்கிழமை கொப்பரை ஏலம் நடக்கிறது. இந்த வார ஏலத்துக்கு மதுரை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 48 விவசாயிகள் கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். மொத்தம் 279 மூட்டைகள் வரத்து இருந்தது.
இவற்றின் எடை 13,593 கிலோ. கரூர், வெள்ளக்கோவில், காங்கயம், முத்தூர் பகுதிகளில் இருந்து 9 வியாபாரிகள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர்.
இங்கு ஒரு கிலோ ரூ.53.05 முதல் ரூ.109.15 வரை ஏலம் போனது. விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.10 லட்சத்து 79 ஆயிரத்து 446 விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.