தமிழக முதல்வர் இன்று திருப்பூர் வருகை: ரூ. 1,875 கோடி மதிப்பு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 1,875.47 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 1,875.47 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 28) அடிக்கல் நாட்டுகிறார். 
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை திருப்பூர் வருகிறார். திருப்பூர், காங்கயம் சாலையில் உள்ள பத்மினி கார்டனில் காலை 9 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ. 1,875.47 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அவர் தொடக்கி வைக்கிறார்.
இதில், ரூ. 1,063.51 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகள், ரூ. 604.05 கோடி மதிப்பில் விடுபட்ட பாதாளச் சாக்கடை திட்டம், ரூ. 52 கோடி மதிப்பில் டவுன்ஹாலை மாநாட்டு அரங்கமாக மாற்றுதல், ரூ.36.50 கோடி மதிப்பில் பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்துதல், ரூ.18.17 கோடி மதிப்பில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைத்தல், ரூ.29.79  கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையத்தை மேம்படுத்துதல், ரூ.2.34 கோடி மதிப்பில் மாநகராட்சி கட்டங்களில் மேற்கூரைகளில் சூரிய ஒளி மின் தகடுகள் பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்தல், ரூ.30 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைத்தல் உள்ளிட்ட திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டித் தொடக்கி வைக்கிறார்.
மேலும், திருப்பூர் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ரூ.490.76 கோடி மதிப்பில் நிர்வாக அனுமதி பெறப்பட்ட பணிகள் மற்றும் ரூ.250 கோடி மதிப்பீட்டில் விரிவடைந்த பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் (அம்ருத் 2015-16) ஆகியவற்றையும் தொடக்கிவைத்துப் பார்வையிடுகிறார். இதையடுத்து, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு அவிநாசியில் அடிக்கல் நாட்டுகிறார். 
இந்த நிகழ்ச்சியில், தமிழக சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால், அமைச்சர்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எஸ்.பி.வேலுமணி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, மக்களவை உறுப்பினர் வி.சத்யபாமா, சட்டப் பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார், கரைப்புதூர் ஏ.நடராஜன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், மாநகராட்சி ஆணையர் க.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com