சுடச்சுட

  

  வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் பெரமியம் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  சிறப்பு விருந்தினர் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா கல்வி அமைப்பின் நிர்வாகி தூயவன் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நஸ்ருதீன், ஆசிரியர் பயிற்றுநர்கள் வெங்கடேசன், விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியர் தீபா செய்திருந்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai