சுடச்சுட

  

  மக்காச்சோளத்தில் படைப் புழு தாக்குதல்: நிவாரணம் வழங்க முதல்வருக்கு கோரிக்கை

  By DIN  |   Published on : 12th January 2019 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
  இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய மனு விவரம்:
  தமிழகத்தில் திண்டுக்கல், பெரம்பலூர், சேலம், புதுக்கோட்டை,  ஈரோடு, விருதுநகர், திருநெல்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.
  திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், பொங்கலூர், குண்டடம், மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. மக்காச்சோளம் பயிரிட ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவாகிறது. 
  இந்நிலையில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டு விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அப்போது வேளாண்துறை பரிந்துரைத்த பூச்சி மருந்துகள் செயல் விளக்க அடிப்படையில் விவசாயிகள் மக்காளச்சோளப் பயிரில் மருந்து தெளித்தும் எந்தப் பலனும் இல்லை. இதனால் விவசாயிகளுக்கு பூச்சி மருந்துக்கான செலவு கூடுதலாகியுள்ளது.
  இந்நிலையில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் திருப்பூர் மாவட்டம் விடுபட்டுள்ளது. எனவே, திருப்பூர் மாவட்டத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai