உடுமலையில் சைனிக் பள்ளி ஆண்டு விழா

உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியின் 56ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியின் 56ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி முதல்வர் ஹெச்.எஸ்.சிதானா தலைமை வகித்தார். 
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்திய ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தே.அன்பு, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். 
இதைத் தொடர்ந்து மாணவர்களின் உடல் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  கல்வி, விளையாட்டுத் திறன் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஒட்டுமொத்தமாக சிறந்த இல்லத்துக்கான பரிசு பல்லவன் இல்லத்திற்கு  வழங்கப்பட்டது.  இதில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com