சுடச்சுட

  


  காங்கயத்தை அடுத்த கீரனூர் ஊராட்சியில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
  கீரனூர் ஊராட்சியில் ஈஸ்வரன் கோவில் அருகில் உள்ள வளாகத்தில் திமுக சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு காங்கயம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் என்.எஸ்.சிதம்பரம் தலைமை வகித்தார்.
  மாநில இளைஞர் அணிச் செயலர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
  இதில், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். 2009ஆம் ஆண்டுக்கு பின் விவசாயிகளுக்கு வழங்கப்படாத இலவச மின் இணைப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். 
  கீரனூர் ஊராட்சி திமுக பொறுப்பாளர் எஸ்.விஸ்வநாதன், ஒன்றிய துணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டப் பிரதிநிதிகள் குணபாலன், ஈஸ்வரமூர்த்தி ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் டி.சக்திவடிவேல், பாப்பினி ஊராட்சி முன்னாள் தலைவர் பி.பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai