சுடச்சுட

  

  திருப்பூர் மாவட்டத்தில் ஜனவரி 19 இல் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம்

  By DIN  |   Published on : 13th January 2019 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் சனிக்கிழமை (ஜனவரி 19) நடைபெற உள்ளது. 
  இதுகுறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
  திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் சனிக்கிழமை (ஜனவரி 19) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனைத்து வட்டங்களிலும் உள்ள கிராமங்களில் நடைபெறவுள்ளது. 
  இக்குறைதீர்க்கும் நாள் முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்க உள்ளனர். 
  முகாம் நடைபெறும் இடங்கள்: அவிநாசி வட்டத்தில் வள்ளிபுரம், திருப்பூர் வடக்கு வட்டத்தில் நெருப்பெரிச்சல், திருப்பூர் தெற்கு வட்டத்தில் வேலம்பட்டி கிராமம், ஊத்துக்குளி வட்டத்தில் புஞ்சைத்தளவாய்பாளையம், பல்லடம் வட்டத்தில் அனுப்பட்டி, உடுமலைப்பேட்டை வட்டத்தில் ராவணாபுரம் , மடத்துக்குளம் வட்டத்தில் வேடப்பட்டி, தாராபுரம் வட்டத்தில் காங்கேயம்பாளையம், காங்கயம் வட்டத்தில் சிவன்மலை ஆகிய கிராமங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது. 
  இதில் கூட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம் போன்ற மின்னணு குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai