சுடச்சுட

  

  திருவள்ளுவர் தினத்தை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து மதுபானக் கடைகளுக்கும் வரும் ஜனவரி 16 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
  திருவள்ளுவர் தினத்தை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், பார்கள் ஆகியவற்றுக்கு வரும் புதன்கிழமை (ஜனவரி 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
  ஆகவே, உத்தரவை மீறி அன்றைய தினம் மதுவிற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai